இணையம் என்ற Internet வந்த பிறகு யார் வேண்டுமானலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்ற பேச்சுரிமை நிலைபாடு வலுத்து வருகிறது. தன் மன வெளிப்பாடுகளை பிறரின் தத்துவ பின்னணிகளோடு ,கருத்துக்களோடு காணொளிகள் மூலமாக கூறுவது அதிகரித்து வருகிறது Youtube சானல்களும் பெருகிவருகிறது.எல்லா சானல்களும் தங்கள் சானல்களை லைக் பண்ணவும்,சப்ஸ்கிரைப் பண்ணவும்,பெல் பட்டனை அழுத்தவும் சொல்கின்றன.இதில் சில சந்தா கட்டி சந்தாதாரர்ஆக சொல்கிறது.இது தவிர்க்க முடியாத ஒரு சமூக வலைதள நிகழ்வு.ஓரளவுக்கு அலைபேசி அடிப்படை அறிவிருந்தால் போதும்.நாம் இந்த இணைய போக்குவரத்து நெரிசலை சமாளிக்கலாம்.
1)கைபேசியில் தேவையான செயலிகளை மட்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்
2)நோட்டிபிக்கேஷன் என்ற அறிவிப்புகளை அந்தந்த செயலில் உள்ள அமைப்பில் சென்று செயலிழக்க செய்யவும்.இது உங்கள் மன உளச்சலை தவிர்க்கும். தேவையான அறிவிப்புகளை நிதானமாக அறிந்து கொள்ளலாம்.
3)மிகத்தேவையான வாட்ஸ்அப் குழுக்களை மட்டும் சேமிக்கவும்.மற்ற குழுக்களை அழித்து விடவும்.குழுக்களின் அமைப்பில் சென்று அறிவிப்புகளை செயலிழக்க செய்யவும்.இதனால் உங்கள் அழைப்பு ஒலிகளால் ஏற்படும் பதட்டம் குறையும்.
4) மிக அவசியமான தொலைபேசி எண்களை கைபேசியில் சேமித்து வைக்கவும்.நீண்ட நாள் உபயோகத்தில் இல்லாத எண்களை அழித்து விடவும்.
5)அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.
6) கடன் மற்றும் சூதாட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
7)தேவையற்ற சமூக வலைதளங்களில் வரும் சமூக குற்ற பின்னணி கொண்ட நபர்களின் கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்.
8)மத்திய அரசு மற்றும் மாநில அரசு வலைதளங்கள் மற்றும் செயலிகளின் உண்மைத்தன்மையை கண்டறிந்து அவற்றை பயன் படுத்த வேண்டும்.
9)இளம் வயதினர் உபயோகப்படுத்தும்,அவர்களை திசை திருப்பும் சமூகவலை தளங்களை சரியான பாதுகாப்பு முறைகளை கையாண்டு நிறுத்தவும்.
10)சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மைகளை பரிசோதித்து அதன் பிறகு பார்வேர்டு செய்யவும்.
11)எல்லா சமூக வலைதள கருத்துக்களும் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தாது.தேவையானவற்றை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளவும்.
12)சமூக வலைதள விளம்பரங்களை நன்றாக படித்து அறிந்து கொண்டு செயல் படவும். உண்மைக்கு புறம்பான விளம்பர யுக்திகளை அறிந்து கொள்ளவும்.
13)கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாகக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை நேரில் பார்த்து விசாரித்து அறிந்து கொண்டு செயல் படவும்.
14) இணையம் இன்று ஒரு அத்தியாவசியம் எனினும் ஆபத்துக்களும் அதிகம். பொறுமையுடனும் ,நம்பிக்கையுடனும் அதன் நன்மை தீமைகளை அறிந்து செயல் பட்டால் நமக்கு நன்மை பயக்கும்.
15)காலம் பொன் போன்றது, அதனால் சமூக வலைதளத்தில் உலவும் நேரத்தை இரண்டாக பிரித்து தொழில் முறை (Profession)மற்றும் தனிப்பட்ட (Personal)வலைதளங்களுக்கான நேரத்தை பிரித்துக்கொள்ளுங்கள்.ஒன்றுடன் ஒன்று மோதாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
16)இயன்ற மட்டும் இரவு ஓய்வெடுக்கும் நேரம் கைபேசியில் சமூக வலைதளங்களில் உலவுவதை தவிர்க்கவும்.
17)ஒரே நேரத்தில் பல வேலைகளை கைப்பேசியில் செய்வதை தவிர்க்கவும் (Multi tasking) .ஒரு மனதுடன்(Single minded devotion) கைபேசி வலைதளங்களில் வேலை செய்தால் பல தவறுகளை தடுக்கலாம்.
18)செயற்கை நுண்ணறிவு காலத்தில் நம்முடைய சமூக வலைதள நடத்தையை நாம்தான் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.
19)வங்கி மற்றும் இதர சைபர் குற்றங்களை உடனுக்குடன் காவல்துறை சைபர் குற்றப்பிரிவிற்கு எடுத்துச்செல்லவும்.
20) மேற்கண்ட இணைய போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை தவறாமல் கடைபிடித்து நமது சமூக பயணம் சுமூகமாக இருக்க பார்த்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக