chidambarambabuji.blogspot.com

Readers

God is love

God is love

24.4.25

மகாபாரதம் கதை சுருக்கம்

 http://sivakumar24x7.blogspot.com/2019/01/blog-post.html

மேற்கண்ட லிங்கை முழுமையாக தொட்டு open செய்து வாசிக்கவும். 

22.12.24

மோட்சம்

 மானிடப்பிறவியே மோட்சத்திற்கான  திறவுகோல் 


நம்முடைய வேதங்கள்,தமிழ் மறைகள் எல்லாம் தனிமனித மேம்பாட்டையும்,ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டையும் கருதி செய்யப்பட்டவைகள்தான்.சுயநலமற்று வாழ்ந்த நம் மூதாதையர்கள் வழி வந்த அத்தனை ஆன்மீக மற்றும் தத்துவ கருத்துக்களும் நம்மை வாழ வைத்துக்கொண்டு வருகிறது.அவற்றை கடைபிடித்து வாழ்வதே முக்தி,மோட்சத்திற்கான திறவுகோல்.

அவற்றிற்கான உபகரணங்களே கோவில்கள்,சடங்குகள்,சம்பிரதாயங்கள். இவற்றை பேணி பாதுகாப்பாதே ஒவ்வொரு தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் கடமை மற்றும் பொறுப்பு.

20.12.24

ரசமட்டம்

 ஒரு கட்டிடம் கட்ட கட்டிட மேஸ்திரிக்கு ரசமட்டம் தேவை.அதுபோல நாம் வாழும் போது நம் வாழ்க்கையை சீராக நடத்த எது ரசமட்டமாக செயல் படுகிறது? என்று பார்த்தால் நம் மனம் தான் நமது ரசமட்டம்.

நாலுபேரை பார்த்து நாம் வாழும் வாழ்க்கை தவிர்க்க முடியாதது.தனிமனிதன் தன் சொந்த வாழ்க்கையை வாழ பிற மனிதர்களின் வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் மிக அவசியம்.நாலுபேர்தான் அந்த சமூகம்.ஆனால் அந்த சமூகத்தின் சட்ட திட்டத்தை உருவாக்கும் சக்தியும் மனிதனிடமே சமூக அமைப்புகளான அரசியல் மூலமாக  கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறுவதும் அனுசரித்தும் வாழ்வதும் தனிமனிதனிடத்திலேயே உள்ளது.இந்த நுண்மாண் நுழைபுலம் ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற கருவியால் அவனுள் நுழைந்து ,அறிவு என்ற ரச மட்டத்தினால் சீர் செய்து வாழும் வாழ்க்கை பெரும்பாலும்  தவறில்லாமல் நடக்கும்.


17.12.24

இணைய போக்குவரத்து நெரிசல் Internet Traffic

 இணையம் என்ற Internet வந்த பிறகு யார் வேண்டுமானலும் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்  எழுதலாம் என்ற பேச்சுரிமை  நிலைபாடு வலுத்து வருகிறது. தன் மன வெளிப்பாடுகளை பிறரின் தத்துவ பின்னணிகளோடு ,கருத்துக்களோடு காணொளிகள் மூலமாக கூறுவது அதிகரித்து வருகிறது Youtube சானல்களும் பெருகிவருகிறது.எல்லா சானல்களும் தங்கள் சானல்களை லைக் பண்ணவும்,சப்ஸ்கிரைப் பண்ணவும்,பெல் பட்டனை அழுத்தவும் சொல்கின்றன.இதில் சில சந்தா கட்டி சந்தாதாரர்ஆக  சொல்கிறது.இது தவிர்க்க முடியாத ஒரு சமூக வலைதள நிகழ்வு.ஓரளவுக்கு அலைபேசி அடிப்படை அறிவிருந்தால் போதும்.நாம் இந்த இணைய போக்குவரத்து நெரிசலை  சமாளிக்கலாம்.

1)கைபேசியில் தேவையான செயலிகளை மட்டும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும்

2)நோட்டிபிக்கேஷன் என்ற அறிவிப்புகளை அந்தந்த செயலில் உள்ள அமைப்பில் சென்று செயலிழக்க செய்யவும்.இது உங்கள் மன உளச்சலை தவிர்க்கும். தேவையான அறிவிப்புகளை நிதானமாக அறிந்து கொள்ளலாம்.

3)மிகத்தேவையான வாட்ஸ்அப் குழுக்களை மட்டும் சேமிக்கவும்.மற்ற குழுக்களை அழித்து விடவும்.குழுக்களின் அமைப்பில் சென்று அறிவிப்புகளை செயலிழக்க செய்யவும்.இதனால் உங்கள் அழைப்பு ஒலிகளால் ஏற்படும் பதட்டம் குறையும்.

4) மிக அவசியமான தொலைபேசி எண்களை கைபேசியில் சேமித்து வைக்கவும்.நீண்ட நாள் உபயோகத்தில் இல்லாத எண்களை அழித்து விடவும்.

5)அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

6) கடன் மற்றும் சூதாட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

7)தேவையற்ற சமூக வலைதளங்களில் வரும் சமூக குற்ற பின்னணி கொண்ட நபர்களின் கருத்துக்களுக்கு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்.

8)மத்திய அரசு மற்றும் மாநில அரசு வலைதளங்கள் மற்றும் செயலிகளின் உண்மைத்தன்மையை கண்டறிந்து அவற்றை பயன் படுத்த வேண்டும்.

9)இளம் வயதினர் உபயோகப்படுத்தும்,அவர்களை திசை திருப்பும்  சமூகவலை தளங்களை சரியான பாதுகாப்பு முறைகளை கையாண்டு நிறுத்தவும்.

10)சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத்தன்மைகளை பரிசோதித்து அதன் பிறகு பார்வேர்டு செய்யவும்.

11)எல்லா சமூக வலைதள கருத்துக்களும் எல்லோருக்கும் எப்போதும் பொருந்தாது.தேவையானவற்றை மட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளவும்.

12)சமூக வலைதள விளம்பரங்களை நன்றாக படித்து அறிந்து கொண்டு செயல் படவும். உண்மைக்கு புறம்பான விளம்பர யுக்திகளை அறிந்து கொள்ளவும்.

13)கல்வி மற்றும் பயிற்சி தொடர்பாகக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மையை நேரில் பார்த்து விசாரித்து அறிந்து கொண்டு செயல் படவும்.

14) இணையம் இன்று ஒரு அத்தியாவசியம் எனினும் ஆபத்துக்களும் அதிகம். பொறுமையுடனும் ,நம்பிக்கையுடனும் அதன் நன்மை தீமைகளை அறிந்து செயல் பட்டால் நமக்கு நன்மை பயக்கும்.

15)காலம் பொன் போன்றது, அதனால் சமூக வலைதளத்தில் உலவும் நேரத்தை  இரண்டாக பிரித்து தொழில் முறை (Profession)மற்றும் தனிப்பட்ட (Personal)வலைதளங்களுக்கான நேரத்தை பிரித்துக்கொள்ளுங்கள்.ஒன்றுடன் ஒன்று மோதாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

16)இயன்ற மட்டும் இரவு ஓய்வெடுக்கும் நேரம் கைபேசியில் சமூக வலைதளங்களில் உலவுவதை தவிர்க்கவும்.

17)ஒரே நேரத்தில் பல வேலைகளை கைப்பேசியில் செய்வதை தவிர்க்கவும் (Multi tasking) .ஒரு மனதுடன்(Single minded devotion) கைபேசி வலைதளங்களில் வேலை செய்தால் பல தவறுகளை தடுக்கலாம்.

18)செயற்கை நுண்ணறிவு காலத்தில் நம்முடைய சமூக வலைதள நடத்தையை நாம்தான் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

19)வங்கி மற்றும் இதர சைபர் குற்றங்களை உடனுக்குடன் காவல்துறை  சைபர் குற்றப்பிரிவிற்கு எடுத்துச்செல்லவும்.

20) மேற்கண்ட இணைய போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை  தவறாமல் கடைபிடித்து நமது சமூக பயணம் சுமூகமாக இருக்க பார்த்துக்கொள்ளுங்கள்.


10.12.24

பதிவு ஏன் அவசியம்?

தினசரி வாழ்க்கை பதிவுகளை எழுத்தாலும் எண்ணாலும்,புகைப்படங்களாலும் பிற ஒளி,ஒலி பதிவுகளாலும் அமைத்துகொள்வது அவசியம்.இதை ஆங்கிலத்தில் Journal என்று அழைப்பார்கள். புகழ் பெற்ற ஆளுமைகளிடம் இந்த பழக்கம் தவறாமல் இருந்துள்ளது.உதாரணமாக அனந்தரங்கம் பிள்ளையின் நாள் குறிப்பு.மறைந்த தமிழக முதல்வர். எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள்.காலத்தை பிரதிபலிப்பதுதான் இத்தகைய பதிவுகள்.மனதால் மட்டும் ஞாபகத்தில் பதிவு செய்து வைப்பது இந்த கால கட்டத்தில் பயனற்றது.நீதி மன்றங்களும், அரசு இயந்திரங்களும் ,எழுத்து பூர்வமான ஆதாரங்களையே அங்கீகாரம் செய்கின்றது.
எழுத படிக்க தெரிந்தவர்கள் அனைவரும்,  தினசரி வாழ்க்கையை அதன் நிகழ்வுகளை கமுக்கமாக  எண்ணாலும், எழுத்தாலும் சுருக்கமாக பதிவு செய்வது நமக்கு மட்டுமல்ல ,சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும்.