ஒரு கட்டிடம் கட்ட கட்டிட மேஸ்திரிக்கு ரசமட்டம் தேவை.அதுபோல நாம் வாழும் போது நம் வாழ்க்கையை சீராக நடத்த எது ரசமட்டமாக செயல் படுகிறது? என்று பார்த்தால் நம் மனம் தான் நமது ரசமட்டம்.
நாலுபேரை பார்த்து நாம் வாழும் வாழ்க்கை தவிர்க்க முடியாதது.தனிமனிதன் தன் சொந்த வாழ்க்கையை வாழ பிற மனிதர்களின் வாழ்க்கையையும் புரிந்து கொள்ள வேண்டும்.சுற்றுச்சூழல் மிக அவசியம்.நாலுபேர்தான் அந்த சமூகம்.ஆனால் அந்த சமூகத்தின் சட்ட திட்டத்தை உருவாக்கும் சக்தியும் மனிதனிடமே சமூக அமைப்புகளான அரசியல் மூலமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மீறுவதும் அனுசரித்தும் வாழ்வதும் தனிமனிதனிடத்திலேயே உள்ளது.இந்த நுண்மாண் நுழைபுலம் ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்ற கருவியால் அவனுள் நுழைந்து ,அறிவு என்ற ரச மட்டத்தினால் சீர் செய்து வாழும் வாழ்க்கை பெரும்பாலும் தவறில்லாமல் நடக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக